Date:

பிரதமர் பதவி விலகப் போகிறாரா?!

பிரதமரின் உடல்நல குறைவு காரணமாக முழுமையாக பணியாற்ற முடியாத நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொருவர் பணியாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பணிச் சுமை அதிகரித்துள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அரசாங்கத்தின் உள்ளகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்த்து அனைவருடனும் இணங்க கூடிய ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க கூடும் எனவும் சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மஹிந்த தனது பதவி விலகுவதாகவும் புதிய பிரதமருடன் வேலை செய்வதற்கு தயார் எனவும் அலரி மாளிகை அதிகாரியுடன் தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியானது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலத்துடன் தொடர்பு கொண்ட சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளன.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவலை அவரது ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...