Date:

சதொச விற்பனையகத்தில் நுகர்வோருக்கு 1 கிலோ சீனி, 500 கிராம் பருப்பை வழங்குமாறு அறிவுறுத்தல்

வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஐந்து கிலோ நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா கிலோ 130 ரூபாவுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 160 ரூபாவுக் கும் பருப்பு கிலோ 360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

நுகர்வோருக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் சிவப்பு பருப்பை வழங்குமாறு நிர்வாகம் அறிவு றுத்தியுள்ளது.

இதேவேளை சதொச கிளைகளில் கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...