இன்று கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிற்பகல் 3 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
‘இருண்ட எதிர்காலத்திற்கு ஒளியேற்ற தேசிய இணக்கப்பாடு – தேசியக் கொள்கைளை வகுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரகம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு, இந்தப் போராட்டம் மூலம் தாங்கள் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.