இந்திய கடன் உதவி திட்டத்தின் பிரகாரம் நாட்டை வந்தடைந்துள்ள இரண்டாவது கப்பலில் இருந்து எரிபொருளை தரையிறக்கும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி நிலைமையானது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நிவர்த்தி செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.