டீசல் பெற்றோல் நெருக்கடி காரணமாக கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஓரிரு நாள் குப்பை அகற்றும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமல் போனதாக கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கர் தெரிவித்தார்.
இந்த விடயம் தெர்ர்ப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெள்ளவத்தை கொள்ளுபிட்டி மற்றும் பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு நாளும் மற்றைய நாள் கோட்டை பகுதியில் குப்பைகளை ஆகற்றமுடியாது போனது.
குறித்த சிக்கல் நிலையின் காரணமாக நகரின் குப்பைகள் இரு நாட்கள் மாத்திரமே ஆகற்ற முடியாது போனது. ஆனால் தற்போது அவ்வாறான ஒரு சிக்கல் நிலையில்லை.
நாங்கள் நகரின் குப்பைகளை சேகரிப்பதற்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்கள் டீசல் இல்லை என தெரிவித்து குப்பைகளை ஆகற்றாமல் இருக்க முடியாது. ஆவர்கள் குப்பைகளை அகற்றியே ஆக வேண்டம் அதற்காக தான் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்