கொழும்பு நகரின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான பெற்றோல் இன்மை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் இக்பால் தெரிவித்துள்ளார்.
‘ தேவையான பெற்றோல் கிடைக்காமையின் காரணமாக கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்டபகுதியில் குப்பைகளை அகற்றுவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தேவையான பெற்றோல் கிடைக்கப்பெற்றதை அடுத்து எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு நகரில் தேங்கி கிடக்கின்ற குப்பைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது