Date:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகல்

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.
அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார...

இந்தியா – பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா -...

47 இஸ்ரேல் பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் புகைப்படங்களை...

இந்தியா இன்று பாகிஸ்தானுடன் கைகுலுக்குமா

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (21) சுப்பர் - 4 சுற்றில்...