Date:

இலங்கை சுங்கத்திடம் சிக்கிய 600கோடி கொக்கேய்ன் தொகை!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 350 கிலோகிராம் கொகேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொகேய்னின் சந்தைப் பெறுமதி 6,000 மில்லியன் (600 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பனாமாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கொகேய்ன் மீட்கப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சுங்க தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த கொகேய்ன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...