எம்பிலிப்பிட்டி – கந்துருகஸ்ஹார திறந்த வெளிச் சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த சிறைச்சாலையின் 2 கட்டுப்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைதி கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து எம்பிலிப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 2 சிறை கட்டுப்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநகர்கள் எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.