பிரித்தானியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒவ்வொரு 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உட்பட, அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BA.2 என அழைக்கப்படும் ஒமிக்ரோன் திரிபின் எளிதில் பரவக்கூடிய துணை மாறுபாடு, இப்போது பெரும்பாலானவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை தளர்த்தியமை மற்றும் தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்றவையும் நோய் தொற்றாளர்களின் உயர்வுக்கான காரணிகளாக இருக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.