ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது

பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அளுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் கார் ஒன்று 25ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் மறித்துச் சோதனையிடப்பட்டது. அப்போது, அந்தத் தேரரிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள தேரர், களுத்துறை தெற்கு போம்புவல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் ஆசிரியரான இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் வீரவில பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சாரதி, நவதகல ஹிபன்கந்தவைச் சேர்ந்த, சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்திவரும் 39 வயதுடையவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. இலஞ்ச அல்லது...

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம்...