யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம், அமைச்சுக்கு சென்றிருந்த போதிலும் அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை என வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களை உட் செல்லவும் அனுமதித்திக்காமையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, உத்தியோகத்தர்கள் அமைச்சுக்குள் பிரவேசித்திருந்தனர்.