எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களிற்காக மக்கள் காத்திருக்கும் இடங்களில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் கொலையும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.