நாளை மறுதினம் இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் நேற்று அறிவித்திருந்தார்.
எனினும், சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.