Date:

வரிசையில் நின்றாலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் மொட்டுக் கட்சியிடமே ஆட்சியை வழங்குவர்

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி இளைஞர் முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாடு எதிர்நோக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மாத்திரமே தீர்வு காணப்படுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் அநுர திஸாநாயக்க ஆகியோர் எவ்வளவோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினாலும் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மீது நாட்டு மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கேற்ப பொதுஜன முன்னணிக்கு அதிகாரத்தை மீண்டும் வழங்க தயாராக இருப்பதாகவும் அளுத்கமகே தெரிவித்தார்.

மக்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...