Date:

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் டீசல் தொகையினை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகையினை தாங்கிய கப்பல் நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

35,000 மெற்றிக் டன், அளவிலான டீசல் அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அதனை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் எம்.ஆர் டப்ளியு டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் தொகையினை உடனடியாக தொடருந்து ஊடாக ஏனைய மாகாணங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் உள்ள வரிசைகளில் வீழ்ச்சி ஏற்படும் என வலுசக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 2,000 மெற்றிக் டன் அளவான டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 2 தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையானளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், அதனை கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 3,500 மெற்றிக் டன் அளவிலான எரிபொருள் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அதனை இன்றைய தினத்திற்குள் தரையிறக்கி மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நேற்றும் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...