மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், இன்றிரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், 2 சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் தற்போது மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நேற்றைய தினம் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல இடங்களில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.