Date:

வட பகுதியில் 20 புதிய சதொச நிலையங்கள் திறக்க ஏற்பாடு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலில், ‘யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் உணவு பற்றாக்குறை மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக 20 சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளோம். அவ்வாறு திறப்பதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உணவு களஞ்சிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் பொது மக்கள் இலகுவாக தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1930 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அபாயகரமான ஒரு பொருளாதார நிலையே தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் காரணமாக பல வல்லரசு நாடுகளிலும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எமது நாட்டிலும் இந்த கொரோனா சூழ்நிலையின் காரணமாகவே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது பொருளாதார சூழ்நிலை காணப்படுகின்றது. பல தொழில் வாய்ப்புக்களை இழந்து உள்ள நிலை காணப்படுகின்றது உற்பத்திகள் தடைப்பட்ட நிலையும் காணப்படுகின்றது சகல துறைகளிலும் இந்த கொரோனா நோயானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரேன் யுத்தத்தின் காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதியின் இயற்கை விவசாய முறையை மக்கள் பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்து நாடுகளில் பொருளாதார தாக்கமானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. அத்தோடு எமது உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நமது நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...