இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, வணிக ஆலோசனைக்கான முகாமைத்துவ மேம்பாட்டு டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்த அதன் முகாமையாளர்களுக்கு அண்மையில் சான்றிதழ்களை வழங்கியது. இந்த துறைக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நாவலவில் உள்ள HNB FINANCE PLC தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத், மற்றும் HNB Financeஇன் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் முகாமைத்துவ அபிவிருத்தி டிப்ளோமாவை நடத்திய பேராசிரியர் காமினி அல்விஸ், கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தர்மதாச ஆகியோரும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
2021 டிப்ளோமா பாடநெறியில் பங்கேற்றவர்களில், HNB FINANCE PLCஇன் பிராந்திய முகாமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் துணை முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்தின் மேற்பார்வை மற்றும் வழிநடத்துதல்களின் கீழ் இயங்கும் நிறுவனம், இதுவரையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
காலத்தின் தேவைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும் இந்த டிப்ளோமா பாடநெறியானது, சேவையாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இலங்கையை தொடர்ந்து அங்கீகரிப்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான அறிவைத் தொடர்ந்து வழங்குவதாகவும் நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.
HNB Finance தொடர்பில்
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLC இனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.