உக்ரைன் போர் களத்தில், மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ரஷ்யாவின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதன்போது அருகிலுள்ள விமான பழுதுபார்க்கும் ஆலையை அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிவிவ் நகர்(Lviv) போலந்து நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நகராகும்.
அத்துடன் உக்ரைனில் இருந்து வெளியேறும் ஏதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக செயல்பட்டு வருகிறது
இதேவேளை உக்ரைனின் ஏனைய நகரங்கள் மீதும் ரஷ்ய விமானங்கள், புதிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. கிழக்கு நகரமான கார்கிவில், ஒரு பல்கலைக்கழக கட்டிடம் மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது எறிகனைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
மேலும் தெற்கே, கிராமடோர்ஸ்கில், ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
தலைநகர் கீவில், குடியிருப்பு பகுதியில் வீழ்ந்த ஏவுகணை வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மரியுபோல் நகரில் குண்டுவீசித் தாக்கப்பட்ட திரையரங்கில் தஞ்சமடைந்திருந்த 130பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் . இன்றும் 1000 பேர் வரை அந்த கட்டிடத்துக்குள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.