இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15ஆம் திகதி பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமாகியிருந்தார்.
நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நிதியமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லா, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.