Date:

கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கு எரிபொருள் இன்மையால் எரிபொருள் விநியோக சேவையில் பாதிப்பு

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் தாங்கி ஊர்திகளுக்கான எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

அகில இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து, இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்திற்கு அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

 

இதற்கான முறைமையை, இன்று பிற்பகலுக்குள் தயாரித்து தருவதாக, களஞ்சிய முனையத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 

அனைத்து கொள்கலன் தாங்கி ஊர்திகளும், எரிபொருளைக் கொண்டு செல்லுவதற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள்...

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்...