இந்திய கடன் திட்டத்திற்கு அமைவாக முதலாவது எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
மேலும், டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நாட்டை வந்தடையுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார், 40 ஆயிரம் மெட்ரிக்டொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இவ்வாறு நாட்டுக்கு வருகைத்தரவுள்ளது.
அத்துடன், 37 ஆயிரத்து 500 மெட்ரிக் டொண் எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.