Date:

ரஷ்யா-உக்ரைன் போர் -இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை ஏற்றுமதியில் பாரிய தாக்கம்

ரஷ்யா-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று.உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இலங்கை சுற்றுலாத் தளமாக இருப்பதால். இந்த மோதல் இலங்கையின் சுற்றுலாத் துறையை மோசமாகப் பாதித்துள்ளதோடு  நாட்டின் தேயிலை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது. இந்த  ஏற்றுமதி ஊடாக இலங்கைக்கு அன்னளவாக  140 டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றது.

தேயிலை ஏற்றுமதி பாதிப்பு தொடர்பில் அரசியல் ஆய்வாளரான சிசிர ஹேவாவசம் கருத்து தெரிவித்த போது .

“நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடியை இது மேலும் மோசமாக்கும். இந்த இரு நாட்டு மோதலின் விளைவாக ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் தடைபடும் என்பதோடு  நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன்  போரினால் டொலர்களை ஈட்டக்கூடிய மற்றுமொரு சந்தர்ப்பத்தை எமது நாடு இழந்துள்ளது’ என அரசியல் ஆய்வாளர் சிசிர ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.”

நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் இக்கட்டான நிலையில் உள்ளது. தேயிலை நமது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கியப் பயிராகும். உக்ரைனும் ரஷ்யாவும் இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் இரண்டு முக்கிய நாடுகளாகும்.

தற்போதைய சூழ்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் தேயிலையை  ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால்  நாடு வருமானத்தை  இழக்கும் அபாயம் உள்ளது. தற்போது நாட்டின் நிலைமை மோசமடையும், எரிபொருள்,  மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரினால் டொலர்களை ஈட்டக்கூடிய மற்றுமொரு சந்தர்ப்பத்தை எமது நாடு இழந்துள்ளது’ என அரசியல் ஆய்வாளர் சிசிர ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தம் காரணமாக சுமார் 75 சதவீத பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா வழிகாட்டி ஷமிலா பெரேரா தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு சுற்றுலாத் துறை மீண்டு பழைய நிலைமைக்கு மாற தொடங்கியுள்ளது.சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதனால் கணிசமான அளவு வருமானத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆனால் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரால் சுற்றுலாத் துறை மீண்டும் வீழ்ச்சியடைந்தது. சுமார் 75வீதமான பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று சுற்றுலா வழிகாட்டி ஷமிலா பெரேரா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...