நேற்று நிதியமைச்சர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, நிதி அமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் உடன் இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.