Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்தது.

2 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது கருத்திற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தையும் திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கியிருக்கவில்லை.

அதனை தொடர்ந்து தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...