உடன் அமுலுக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு மேலதிகமாக, கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.