அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.
இதன்போது குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் கலகத்தடுப்பு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையிலேயே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத் திடல் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஒன்றுகூடியுள்ளனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் உள்ளிட்டவற்றை தீயிட்டுக் கொளுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.