இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சில இடர்கள் மிகைப்படுத்தப் பட்டதாக நிதியமைச்சு அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சில இடர்களை நிவர்த்தி செய்வதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 11 பில்லியன் டொலர் களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
உணவுப் பணவீக்கம் 25% ஆக உள்ளதாகவும், அதனைக் குறைக்க தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேவை அடிப்படையிலான பணவீக்க அழுத்தங் களைக் குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கடுமையான நாணயக் கொள்கை யொன்றை நடைமுறைப்படுத்துகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையும் போது பொருளாதாரம் மீண்டும் செயற்படுத்தப்படும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.