சர்வதேச நன்கொடையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படாது என இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் (பி.டி.ஏ) ‘பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பிடியாணை இன்றி கைது செய்து தேடுதல் நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி மற்றும் விளம்பரச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாரம்பரிய நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவியைப் பெறும் நோக்கில் அரசாங்கம் இந்தத் திருத்தங்களைச் செய்திருப்பதால் புதிய திருத்தங்கள் எந்த ஒரு விடயங்களையும் மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார் மேலும் ‘இந்த திருத்தங்கள் இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வழகயிலும் பயன்னடாது என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்,’ என்றும் கருத்து தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் முதலில் கொண்டு வரப்பட்ட போதிலும்இ பேச்சு சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும்இ இளைஞர்கள் இன்னமும் இச்சட்டத்தின் கீழ் மென்மையான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.
பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளதுடன் பலர் தடுப்பு காவலில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த குறைபாடுள்ள சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சில வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காகஇ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (பி.டி.ஏ.) அரசாங்கம் திருத்தம் செய்துள்ளதுஇ’ என்று அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளால் ஜிஎஸ்டி 10 பலன்களை இழக்கும் நிலையும் இருப்பதாகவும் நாங்கள் உணர்கிறோம்.இத்திருத்தம் இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லஇ வெறும் நிதி உதவிக்காகவே என்று எமக்குத் தெளிவாகவே தெரிகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (பி.டி.ஏ) இந்தத் திருத்தங்கள் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எளிமையாகச் சொன்னால்இ எதுவும் மாறவில்லை; தற்போதுள்ள சட்டங்கள் மெருகூட்டப்பட்ட நிலையைத்தான் நாம் பார்க்கிறோம்.
‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பி.டி.ஏ) 1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது வரை சுமார் 40 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டம் (பி.டி.ஏ) பல இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இது கொண்டுவரப்பட்டாலும், இன்று அரசியல் வாதிகளையும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் அனுமதிப்பதற்காகவும் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கும் முடக்குவதற்கும் பயன்படுத்தப்படும் நிலையை நாம் காண்கிறோம்.
இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளம் உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும் பலர் தடுப்பு காவலில் இருக்கும் போதே இறந்துள்ளனர்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.எமக்கு திருத்தங்கள் எல்லாம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் நாம் அண்மையில் ஆரம்பித்த ‘கையொப்பமிடும் பிரச்சாரம்’ தற்போது மிகவும் வெற்றிகரமான நிலையில் உள்ளது.
பொதுவாக வடக்குஇ கிழக்கில் மாத்திரம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் தற்போது கொழும்பு, நீர்கொழும்பு, ஹம்பந்தொட்டை மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பி.டி.ஏ) தடை செய்யும் வரை எமது போராட்டம் தொடரும் “.
முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி மற்றும் விளம்பரச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்கள்:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் கைது செய்யப்படும் எந்தவொரு நபரையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 18 மாதங்கள் வரை காவலில் வைக்க முடியும்.ஆனால் தற்போது அது 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்தத் திருத்தத்தின் கீழ் கூடஇ நீதிமன்ற உத்தரவு அல்லது குற்றச்சாட்டைப் பதிவு செய்யாமல் ஒருவரை ஒரு வருடம் வரை காவலில் வைக்க முடியும்.ஒரு வழக்கறிஞரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கைது செய்யப்பட்டார் அவர்களை விரும்பியபடி பார்க்க முடியும் என்பதுதான் புதிய திருத்தம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனி நபர்களைத் தடுத்து வைப்பதற்கும். கடத்துவதற்கும், காணாமல் ஆக்குவதற்கும் கடந்த காலங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதற்கு முன்னர்இ காணாமல் போனவர்களுக்கு சட்டத்தரணியின் சேவையைப் பெறவோ அல்லது அவர்களது குடும்பங்களைச் சந்திக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்த திருத்தங்கள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. திருத்தங்களைச் செய்வதில் இந்தச் சட்டத்தின் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.
உதாரணமாக – நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காவலில் வைப்பது மட்டும் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் ஒழிக்கப்படவில்லை. மேலும்இ சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் கைதியின் வாக்குமூலங்கள் திருத்தப்பட மாட்டாது.