Date:

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்கள்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த புதிய சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தென் மாகாணத்தில் மிரிஸ்ஸ, நாரிகம ஆகிய இடங்களிலும் நுவரெலியா, பின்னவல மற்றும் எல்ல ஆகிய இடங்களிலும் இந்த விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவை பிரதேச பொலிஸ் சுற்றுலாப் பணியகம் என பெயர் மாற்றப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...