ஒரு மூட்டை சீமெந்தின் விலையை 474 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதுடன் நேற்று முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒரு மூட்டை சீமெந்தின் விலை ஆயிரத்து 375 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதற்கு முன்னர் சந்தையில் அதனை அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது 475 ரூபாய் அதிகரிப்புடன் ஒரு மூட்டை சீமெந்தின் விலை ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரித்துள்ளது. எனினும் சந்தையில் இதனை விட அதிக விலைலேயே மீண்டும் விற்பனை செய்யப்படலாம் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.