டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேரூந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேரூந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 121 ரூபா என்ற பழைய விலைக்கு டீசலை வழங்குவதுடன், குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 100 லீற்றர் டீசலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 200 லீற்றர் டீசலும் வழங்கினால், பேரூந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.
டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஆகக்குறைந்த கட்டணம் 25 முதல் 30 ரூபா வரையில் இருக்க வேண்டும்.
ஏனைய கட்டணங்கள், 30 சதவீதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது தங்களின் யோசனையாகும் என அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.