“தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்” என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
உலக சந்தையில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொள்கலன் களுக்கான போக்குவரத்துக் கட்டணமும் அதிகரித்துள்ளது. இவற்றின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கின்றது.
பெரும் நஷ்டத்துக்கு மத்தியிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.இதில் இருந்து கட்டங்கட்டமாகவே மீள வேண்டும்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி தீரும். ஆடைக் கைத்தொழில்மூலம் வருமானம் வரத் தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறையும் எழுச்சி கண்டுவருகின்றது. வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் பணம் அனுப்புகின்றனர்.
இது நெருக்கடியான காலகட்டம். எனவே, தேசிய அரசு என்பதற்கப்பால் எதிரணிகள் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும். பிரிட்டன் போன்ற நாடுகளில் அவ்வாறு நடக்கின்றன. பிற நாடுகளில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால், நாம் அவ்வாறு செய்யவில்லை. எனவே, நெருக்கடி நிலைமையை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நல்லாட்சி அரசும் பொறுப்புக்கூறவேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.