இலங்கையில் மருந்துகளின் விலை மாற்றம் குறித்து தீர்மானம் மேற்கொள்ளவில்லை என மருந்தாக்கல் விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜங்க அமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில ஊடகங்களில் மருந்துகளின் விலை அதிகரிப்பு தொடர்பான செய்தியை தொடர்ந்து குறித்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மருந்துகளின் விலைகள் தொடர்பில் இலங்கை மருந்தாக்கல் விலை கட்டுப்பாட்டாளர்களின் தேசிய மருந்தாக்கல் கட்டுப்பாட்டு அதிகாிகளினால் குறித்த அறிவிப்பு வௌியாகவில்லை. இதன் பிரகாரம் மருந்துகளின் விலையில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் மருந்து விற்பனையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டது என மருந்துகள் விலை கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வைத்தியர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.