Date:

முடிவில்லா விலை அதிகரிப்புகள் -மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில்

டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் விலை கட்டுப்பாட்டு சபையினால் புதிய விலை திருத்தம் வழங்கப்பட உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதையடுத்து அதனை சட்ட வரைஞர் திணைக்களத்தின் அனுப்பி,ஈ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றுமுன்தினம் 230 ரூபா வரையில் அதிகரித்ததை அடுத்து, ஒளடத இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளித்து 50 சதவீத விலை அதிகரிப்பை கோரியிருந்தனர்.

இதன்படி ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் ஒளடத விலை கட்டுப்பாட்டு குழுவிற்கு அதனை முன்வைத்து, 20 சதவீத விலை அதிகரிப்புக்கு அனுமதியை பெற்றிருந்தது.

எனினும் நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 260 ரூபாய் வரையில் உயர்வடைந்தது.

எனவே, இதற்கு சமாந்தரமாக மீண்டும் விலை மீளாய்வை மேற்கொள்ள விலை கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...