ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா உரையாற்றும் போது,
“எதிர்வரும் சில நாட்களுக்குள், டீசல் தட்டுப்பாடு முழுமையாக நீங்கக்கூடும் எனவும்,போதுமான அளவு டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ளதெனவும்” நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் 37, 500 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளது.அத்துடன், இந்த மாதத்திற்குள், போதியளவு டீசலை தொடர்ந்தும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும் அவசியமான டீசல் மற்றும் உலை எண்ணெய்யை, நாளைய தினம் முதல் வழங்க உள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.