ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.