அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கூட்டணி பங்காளிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்காளி கட்சிகளின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரசன்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.