நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று இன்று கந்தளாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. )வின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது மக்களும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இதன்போது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் இந்த தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.