முல்லேரியாவ – ஹிம்புட்டான ஒழுங்கையில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.
இச்சோதனையின்போது, 300 கிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி, 104 வெளிநாட்டு நாணயத்தாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட 102,500 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

                                    




