நேற்று ஹட்டன்-பொகவந்தலாவை வீதியில் பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த சாரதி தற்போது பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகத்துடன் பயணித்தமையே குறித்த விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.