இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்த இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக அவர் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அருந்திக பெர்னாண்டோ அண்மையில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
பெப்ரவரி 2 ஆம் திகதி காலை ராகம மருத்துவ பீட விடுதியில் மாணவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                    




