ஒவ்வொரு வாரமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வர்த்தக செயற்பாடுகளுக்காக திறந்திருக்கும், விசாலமான புதிய வளாகத்தில் டிஜிட்டல் கட்டண வசதிகளுடன் முழு அளவிலான வங்கிச் சேவைகளும் உள்ளன. HNBஇன் நுகர்வோர் விவகார, சிறு மற்றும் நடுத்தர வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன, சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M. ஹனிஃபா, HNBஇன் வர்த்தக வங்கிச் சேவைகள் (Wholesale Banking) தொடர்பான பிரதிப் பொது முகாமையாளர் தமித் பல்லேவத்த, HNBஇன் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகள் பிரதானி ஹிஷாம் அலி ஆகிய அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த வாடிக்கையாளர் மத்திய நிலையம் மக்களின் நன்`மைகாக திறந்து வைக்கப்பட்டது.
“கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது சம்மாந்துறை மக்களின் தொழில் முயற்சியில் அளப்பரிய ஆர்வத்தை வெளிப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் மிகவும் விரும்பப்படும் பிரதேசமாக மாற்றியுள்ளது. இப்பகுதியில் உள்ள சில்லறை, பெருநிறுவன மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூலம் எங்கள் வாடிக்கையாளர் தளத்துடன் கூட்டு சேர்ந்து அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.” என HNBஇன் நுகர்வோர் சேவைகள், சிறிய மற்றும் நடுத்தர வங்கி சேவைகள் பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமன்ன தெரிவித்தார்.
பிராந்தியத்தில் தனது இருப்பை வலுப்படுத்தி, HNB வளர்ந்து வரும் வணிக சமூகமான HNB Payfast, HNB MOMO, HNB Solo, HNB AppiGo மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை எளிதாகவும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட கட்டண அணுகல்களை வழங்குகிறமையும் குறிப்பிடத்தக்கது.