Date:

திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சர்?

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அமைச்சுகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்ட வேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுபதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேவேளை, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...