Date:

எரிவாயு இறக்குமதிசெய்து விநியோகிப்பதில் சிக்கல்

வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இறக்க முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், லிட்ரோ எரிவாயு விநியோகம் தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு இருப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், விரைவில் குறித்த விநியோகமும் தடைபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லாஃப்ஸின் எரிவாயு விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக, தமது நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை இறக்கி விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு எரிவாயு இல்லையென லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...