தொடருந்து சேவைக்கான எரிபொருளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், தொடருந்து சேவைகள் வழமை போல இடம்பெற்று வருவதாகவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.