Date:

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில்- தினேஷ் குணவர்தன

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 5ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் சில நாட்களில் குறித்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முறை இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 340, 508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 2,943 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...