அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் இன்று, மக்கள் மயப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான மாநாடு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என பல தரப்பினக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.