மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.
இன்றைய தினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.